
திருவள்ளூர் செல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜயன் (38) என்ற ராணுவ வீரருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 10 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். அசாமில் பணியில் இருந்த இவர் சமீபத்தில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த விஜயன் குடும்ப தகராறு காரணமாக தனது அண்ணனை வீட்டை விட்டு அனுப்பியது ஏன் என்று கேட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.