
தமிழ் சினிமாவில் ஆராரோ ஆரிராரோ படத்தின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்தான் நடிகை பானுப்பிரியா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு நடித்தவர் தான் நடிகை பானுப்பிரியா .தற்போது படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். ஆனால் நல்ல படங்கள் வந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் பானுப்பிரியா ஏன்டா இந்த படத்தில் நடித்தோம் என்று வருத்தப்பட்ட படம் குறித்து பேசி உள்ளார்.
அதாவது கடந்த 2021 ஆம் வருடம் வந்த நாட்டியம் என்ற தெலுங்கு படத்தின் நடித்ததற்காக வருந்துவதாக கூறியுள்ளார். இதில் அம்மா கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். ஆனால் படத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. கதை சொல்லும் போது கதாபாத்திரம் நன்றாக இருக்கும் என்று நிறைய பில்டப் செய்துவிட்டு கடைசியில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு ஒன்றுமே இல்லை. ஆனாலும் சண்டை வந்துவிடக்கூடாது என்று நினைத்து நடுவில் நிறுத்தாமல் நடித்து முடித்தேன்” என்று கூறியுள்ளார்.