தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு இடையே காலம் காலமாக காவிரி நீர் பிரச்சினை என்பது இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்புகளில் மழை பெய்து வருவதால் தொடர்ந்து காவிரி அணைகளில் இருந்து தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசின் மீது சந்தேகம் இருப்பதாக துரைமுருகன் கூறியுள்ளார். ஆனால் அவர் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டிக்கவில்லை.

இதனால் அவர் கர்நாடக காங்கிரஸிடம் காசு வாங்கி இருப்பாரோ என்று எனக்கு சந்தேகம் எழுகிறது. ஏனெனில் துரைமுருகன் ‌ குறைந்தபட்சம் ஒரு அறிக்கை கூட விடவில்லை. அதோடு சிவக்குமார் கூறியது தவறு என்று இதுவரை திமுகவினரும் கூறியது இல்லை. ஏனெனில் அவர்களுக்கு கர்நாடகாவில் தொழில் உள்ளது. இது தொடர்பாக விமர்சித்தால் பிரச்சனை வரும் என்பதால்தான் அவர்கள் அதைப் பற்றி பேசுவதில்லை. தற்போது மழை பெய்து வருவதால் காவிரி நீர் தொடர்பான பிரச்சனை எழாது. இனி அடுத்த வருடம் தான் காவிரி நீர் பிரச்சனை வரும். மேலும் மனிதர்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய வியாதியே மறதிதான் என்று கூறினார்.