
நடிகை ராஸ்மிகா மந்தனா அதிகமாக தெலுங்கு படத்தில் நடித்த வருகிறார். குறிப்பாக ராஸ்மிகா நடிக்கும் புஷ்பா 2 ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும்போது ஆங்கிலத்தில் பேசினால் எல்லோருக்கும் புரியும் என அவரது ரசிகர் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார்.
அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா மந்தனா நான் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கிறேன். ஆனால் நான் அவர்களது மொழியில் பேசவில்லை என்றால் அவர்களது மொழியை அவமானப்படுத்தி விட்டதாக அவர்கள் நினைப்பார்கள் எனவும், மொழி தெரியாமல் நடித்தேன் என விமர்சிப்பார்கள் எனவும், அதனால் தான் ஆங்கிலத்தில் பேசாமல் மற்ற மொழிகளில் பேசி வருகிறேன் என ராஷ்மிகா கூறியுள்ளார்.