
தேனி மாவட்டம் ஏத்தகோவிலிருந்து ஆண்டிப்பட்டியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வழக்கமாக பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் என பலர் பயணித்தனர்.
இந்நிலையில் அதில் பயணித்த இளைஞர்கள் சிலர் மாணவிகளை கேலி செய்துள்ளனர். இதனால் தனியார் பள்ளியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவன் இதனை தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அந்த சிறுவனை அடித்து கீழே விட்டு தள்ளி மீண்டும் தாக்கியுள்ளனர். அதில் காயமடைந்த மாணவன் தன் பெற்றோர்களிடம் சென்று நடந்த விஷேயங்களை கூறினார்.
இதைத்தொடர்ந்து அச்சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.