சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் சௌந்தர் – அருணா தம்பதி. இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (14), ரிஷிகா (13) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரிஷிகா, வீட்டின் வெளியே செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த தந்தி சௌந்தர், ”ஏன் தனியாக உட்கார்ந்து செல்போனில் பேசுகிறாய்.

வீட்டின் உள்ளே சென்று பேசு என்று கண்டித்தார். ஆனால் தந்தையின் பேச்சை தாங்கிக் கொள்ளாத ரிஷிகா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.