உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாமிலி மாவட்டத்தில் நிதி பாண்டே என்பவர் மருந்து ஆய்வாளராக வேலை பார்க்கிறார். இவர் ஒரு மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். ஏன் நான் சொல்றத கேளு. என் முன்னாடி பேரம் பலிக்காது. எவ்வளவு சொன்னாலும் செய். கடை நடத்தணுமா? வேண்டாமா?

நேரடியா FIR போடும் அளவுக்கு உன் கடையில் நிறைய குறைகள் இருக்கு என மெடிக்கல் ஷாப் உரிமையாளரிடம் பேரம் பேசுகிறார். அது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் முதன்மை செயலர் பி.குரு பிரசாத் நிதி பாண்டேவை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.