தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடித்த “சேதுபதி” என்ற படத்தில் விசாரணை அதிகாரியாக நடித்தவர் டி.எஸ் ஆர் தர்மராஜ். பல படங்களில் துணை வேடங்களில் நடித்த இவருக்கு அயலி வெப்சீரிஸ் தான் நல்ல அடையாளத்தை பெற்று கொடுத்தது. அதன் பிறகு பல படங்களிலும் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் குறைந்த உயரம், வித்தியாசமான முக அமைப்பு, தனித்த குரல் வளம் என தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை பிடித்து வைத்துள்ளார். இவர்  சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “சினிமாவில் நடிப்பதற்கு முன்பு திருப்பூரில் தங்கி ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பெரிய பெரிய ஜவுளி நிறுவனங்களுக்கு பணம் வாங்கி கொடுப்பதுதான் இவருடைய வேலை. பணம் என்றால் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. கோடிகளில் பணத்தை வாங்கி கொடுக்கும் நபராக பிசினஸ் நடத்தி வந்துள்ளார். ஆனால்  சினிமா ஆசை அவரை விடவில்லை. பொள்ளாச்சியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு நேரில் சென்று வாய்ப்பு கேட்டுள்ளார். ஏறினால் பிளைட் இறங்குனா கார் என்று தொடர்ந்து பத்து வருடங்களில் திருப்பூரில் ஜவுளி தொழிலில் கோடிகளில் புரண்டு வந்த இவர் தன்னுடைய சினிமா ஆசைக்காக அந்த தொழிலை விட்டுவிட்டு 200 ரூபாய்க்கு துணை நடிகராக நடிக்க வந்தார். அப்படி வாய்ப்புகளை தேடி இப்போது தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.