
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் காங்கேயர்டவுன்ஷிப் பகுதியில் சம்பத்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லோக கணேஷ் என்ற 17 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இதில் சம்பத் இறந்துவிட்ட நிலையில் தமிழரசி தன் மகனை தனியாக வளர்த்து வந்தார். இதில் லோக கணேஷுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இதனால் அவர் தன் தாயுடன் பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு பிறந்தநாள் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் பின்னர் குளிப்பதற்காக லோக கணேஷ் சென்றான்.
அங்கு குளியலறையில் ஸ்விச் போட்ட போது திடீரென மின்சாரம் தாக்கி சிறுவன் மயங்கி விழுந்தான். உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏற்கனவே கணவன் இழந்த நிலையில் மகனுக்காக வாழ்ந்து அந்த தாய் தற்போது மகனையும் இழந்து வேதனையில் தவிப்பது அந்த பகுதியில் இருப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.