உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் 21 லட்சம் ரூபாய் வரதட்சணை மற்றும் பார்ச்சூனர் கார் கேட்டு கரிஷ்மா என்ற இளம் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கணவர் விகாஸ் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாமியார் மற்றும் கணவனின் சகோதரி மற்றும் சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணத்தின் போது பதினோரு லட்சம் ரூபாய் மதிப்பில் நகைகள் மற்றும் கார் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பெண் குழந்தை பிறந்ததை காட்டி மேலும் 10 லட்சம் ரூபாய் பெற்ற நிலையில் கூடுதலாக பணம் கேட்டு கரிஷ்மாவை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.