கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்துள்ளனர். குறிப்பட்ட காலம் முடிந்த பிறகும் பணத்தை கொடுக்காமல் பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இவ்வாறாக சீட்டு நடத்தியவர்கள் 2.65 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளனர்.

இதனால் பணத்தை இழந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அண்ணா நகர் ஈபி காலனி வைத்திருந்த பாஜக முன்னாள் நிர்வாகி சிவகுமார், அவர்கள் மனைவி சூர்ய மகாலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.