புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த B. Tech பட்டதாரியான வெங்கட்ராம் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றி வருகின்றார். அங்கு B. Pharm படித்த கிளைசிபெத்சிம்பலன் என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு காதலாக மாறியதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

பிலிப்பைன்ஸ் பெண் தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து புதுச்சேரி முத்தியால் பேட்டையிலுள்ள பொண்ணு மாரியம்மன் கோவிலில் மணமக்கள் இருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். பொட்டு வைப்பது முதல் தொட்டு கும்பிடும் வரை ஒவ்வொன்றாய் மணமகளுக்கு சொல்லிக் கொடுத்து மணமகன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்