
மத்திய பிரதேச மாநிலம் கிருஷ்ணா கல்யாண புரா என்னும் பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஊரின் அருகில் ஏலத்திற்கு வந்த கல்குவாரி ஒன்றை அவர் வாங்கினார். அந்த கல்குவாரியில் ஒரு நாள் ராஜு வேலை செய்து கொண்டிருக்கும் போது அதில் உயர்ந்த வைரக்கல் ஒன்று கிடைத்தது.
இதனை கண்ட ராஜு அந்த வைரக்கல்லை அரசு அதிகாரியிடம் ஒப்படைத்தார். அதனை சோதனை செய்த அதிகாரிகள் 19.22 கேரட் எடை இருப்பதாக கூறினார்கள். அதோடு அதன் மதிப்பு 80 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்றும் கூறினார்கள். இதனால் இந்த வைரக்கல்லை அதிகாரிகள் ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். அதனால் வரும் பணத்தை ராஜூவிடம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜு மனைவி, குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வருகிறேன் என்றும் எனக்கு கிடைத்துள்ள வைரக்கல் மூலம் வரும் பணத்தை வைத்து எனது குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பேன் என்று கூறினார்.