இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அந்த வகையில் ஒரு ஏழை தாய் தன்னுடைய குழந்தையின் ஆசையை நிறைவேற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அந்த குடும்பம் கொஞ்சம் வறுமையில் வாடும் குடும்பம் போல. அந்த குழந்தை தன் தாயிடம் ரோலர் கோஸ்டரில் செல்ல வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை வெளிப்படுத்துகிறது.

இதனால் அந்த தாய் நாற்காலியை தன் மடியில் வைத்து அதில் ஒரு தலையணையை வைத்து ரோலர் கோஸ்டரில் செல்வது போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கிறார். அந்த குழந்தையும் மகிழ்ச்சியாக அதனை அனுபவிக்கிறது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் லைக்குகளை குவிக்கிறார்கள்.