
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை திரிஷாவை சேலம் மாவட்டத்தின் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜு அவதூறாக பேசியிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. இதற்கு திரை துறையினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஏவி ராஜுக்கும் நடிகர் திரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார் .திரிஷா தன்னுடைய எக்ஸ் தளத்தில் நோட்டிசை பதிவிட்டு, ஏவி ராஜுவின் பேச்சால் கடந்த நான்கு நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதற்கான நஷ்ட ஈட்டு தொகையை அவர் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த அறிவிப்பை பெற்ற 24 மணி நேரத்துக்குள் திரிஷாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதோடு மன்னிப்பு அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் ஏவி ராஜுவுக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது.