
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி மறக்குமா நெஞ்சம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஒரே நேரத்தில் திறந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பலரும் உடைந்து சீட்டு இருந்தும் நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதற்கு நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனம் விளக்கம் அளித்தது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியை காண முடியாதவர்களுக்கு நுழைவு கட்டடத்தை திருப்பி வழங்கி வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக நிகழ்ச்சிக்கு கேளிக்கை வரி செலுத்த கோரி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் நுழைவு கட்டணத்தில் 10% கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.