இந்தியாவில் தினம் தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் மிக சௌகரியமாக குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் இந்திய ரயில்வே ஏசி மற்றும் ஸ்லீப்பர் கோச்களில் தூங்குவதற்கான விதிகளை மாற்றி உள்ளது.

இந்த புதிய விதியின் படி, பயணிகள் மிடில் பெர்த்தை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே திறந்து வைக்க முடியும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அதனைப் போலவே பயணிகள் இரவு 10 மணிக்கு முன்பு அல்லது காலை 6 மணிக்கு பிறகு தங்கள் இருக்கையில் தூங்க முயற்சிக்கக் கூடாது. இந்த விதிகளை பயணிகள் மீறினால் ரயில்வே மீது புகார் அளிக்கலாம். இதற்கு முன்னதாக இந்த நேரம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.