ஜூலை 1 நாளை முதல் பல்வேறு துறைகளில் பணம் சார்ந்த விஷயங்களில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஐ சி ஐ சி ஐ வங்கி சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஐசிஐசிஐ வங்கி பல்வேறு கிரெடிட் கார்டு சேவைகளில் திருத்தங்களை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் அனைத்து கார்டுகளிலும் (எமரால்டு பிரைவேட் மெட்டல் கிரெடிட் தவிர) கார்டு மாற்றுக் கட்டணத்தை 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தியுள்ளது.