ஐசிசி டி20 உலக கோப்பை போட்டிகள் வருகின்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது. அந்த வகையில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஜூன் 5-ம் தேதி நியூயார்க்கில் அயர்லாந்து அணியுடன் மோதுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் வருகின்ற 25ஆம் தேதி அமெரிக்கா செல்ல இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதன்படி கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அரஷ்தீப் சிங், ரிஷப் பண்ட், பும்ரா, சூரியகுமார் யாதவ், பயிற்சி உதவியாளர்கள் ஆகியோர் வருகின்ற 25-ம் தேதி அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள். மேலும் இதைத் தொடர்ந்து 2-வது குழுவினர் ஐபிஎல் இறுதிப்போட்டி முடிவடைந்த பிறகு மே 27 ஆம் தேதி அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.