
ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மாற்றமின்றி தொடர்ந்து 3 இடங்கள் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இருக்கிறது. அதன் பிறகு 6-ம் இடத்திலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், நியூசிலாந்து அணி மாற்றமின்றி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
அதன்பிறகு பாகிஸ்தான் அணி ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்திலும், தென்னாபிரிக்க அணி 3 இடங்கள் சரிந்து 7-வது இடத்திலும் இருக்கிறது. மேலும் இந்த பட்டியலில் கடைசி 3 இடங்களில் இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது.