சமீபத்தில் ஐபிஎல் தொடரின் 18 வது சீசன் தொடங்கியது . இதுவரை நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ளது. அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த சீசனை வெற்றியோடு தொடங்கி இருக்கிறது.  மும்பைக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை நான்கு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை கைப்பற்றியது.

இந்த நிலையில் முன்னாள் கேப்டன் தோனி இம்பேக்ட் விதிகுறித்து பேசி உள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டு போது அந்த விதி உண்மையில் தேவையற்றதாக உணர்ந்தேன். ஒரு விதத்தில் எனக்கு உதவியது. ஆனால் அந்த நேரத்தில் அந்த விதி எனக்கு தேவையற்றதாக இருந்தது.  நான் போட்டியில் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்கிறேன். நான் இம்பேக்ட் பிளேயர் கிடையாது. கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா இருவரும் ஏற்கனவே இந்த விதி குறித்துவிமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.