ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் டெல்லி கேப்பிடல் அணியில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு போட்டியின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவரால் போட்டியில் தொடர முடியவில்லை. இதன் காரணமாக அவர் சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்.

இந்நிலையில் காயம் காரணமாக மிட்செல் மார்ஷ் சொந்த ஊருக்கு திரும்பி விட்டதால் அவர் மீண்டும் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என நேற்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அவருக்கு பதிலாக மாற்றுவீரர் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.