
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 17-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில் அதற்கு அடுத்து நான்கு போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் சிஎஸ்கே மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் தற்காலிகமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக மீண்டும் எம்.எஸ் தோனி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர் ஷாம் கரண் தற்போது சமோசா விற்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரை சிஎஸ்கே ரசிகர்கள் சுட்டிக் குழந்தை என்று அன்போடு அழைப்பார்கள். ஆனால் உண்மை என்னவெனில் அது ஷாம் கரன் போன்றே இருக்கும் வேறொரு நபராம். இந்த வீடியோ கொல்கத்தா மற்றும் மும்பை இடையேயான போட்டியின் போது எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதாவது சென்னை அணி கலந்து கொள்ளாத போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா மோதிய போட்டியில் எப்படி ஷாம் கரன் சமோசா விற்பார் என்று கேள்வி எழுந்த நிலையில் நம்முடைய ரசிகர்கள் ஆராய தொடங்க அதன் உண்மை நிலவரம் தெரிய வந்தது.
View this post on Instagram
அதாவது ஷாம் கரன் போன்றே தோற்றம் கொண்ட பிரபல யூடியூபர் ஜேக் ஜேக்கின்ஸ் என்பவர் தான் சமோசா விற்பனை செய்துள்ளார். அவர் நகைச்சுவைக்காக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இப்படி ஒரு செயலில் ஈடுபட்டார். அவர் குறும்புக்காக அப்படி செய்த நிலையில் அவரை உண்மையில் ஷாம் என்று நினைத்து ரசிகர்கள் போட்டோ எடுத்தது தான் அதில் ஹைலைட். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.