அமெரிக்காவில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 8 மற்றும் 12 வயதில் இரு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களை தாயார் அழைத்துக் கொண்டு விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஐபோனுக்காக சகோதரிகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த 12 வயது சிறுமி தன்னுடைய தங்கையை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் தான் கொலை செய்தது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கட்டிலுக்கு அடியில் உடலை மறைத்து வைத்துவிட்டார். இந்த சம்பவம் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் முழுவதுமாக பதிவாகியிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 12 வயது சிறுமியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது