சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அப்பகுதியில் ஏதேனும் விரும்ப தகாத செயல்கள் ஏற்பட்டால் காப்பீடு வழங்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. இதற்காக காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு ஆன்லைன் தரிசனத்திற்கு விண்ணப்பிக்கும் பக்தர்களிடம் 10 ரூபாய் காப்பீட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இது பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.