விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நூலக உதவியாளராக கடந்த 6 மாதத்திற்கு முன்பு தற்காலிகமாக பணியில் அமர்த்தபட்டார்.

ஆனால் 6 மாதமாக அவருக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் மாரியம்மாளை அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கிவிட்டனர்.

நேற்று மாரியம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமானை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

மேலும் ஐயா எனக்கு வேலை வேண்டாம்… நான் வேலை செய்த 6 மாத சம்பளத்தை பெற்று தாருங்கள் என கெஞ்சி கேட்டு கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.

உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.