
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூரியகுமார் யாதவ் ஐபிஎல் 2025 தொடரில் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்பி உள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் குஜராத் அணியை தனியாக எதிர்த்து அவர் விளையாடினார். தன்னுடைய ஆட்டத்தால் ரசிகர்களை மகிழ்வித்தார். இன்னொரு பக்கம் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தாலும் அவர் தன்னுடைய நிலைப்பாட்டை கைவிடாமல் அணியை துடிப்பாக நகர்த்தி வந்தார்.
இந்த நிலையில் 16 வது ஓவரில் ப்ரசித் கிருஷ்ணா ஸ்கூப் செய்ய சூரியகுமார் யாதவ் முயன்றபோது பந்து தலையின் மீது பட்டது. இதனை எடுத்து தலையில் பலத்த அடி விழுந்ததால் அவர் தரையில் விழுந்து விட்டார். இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மற்றும் நிர்வாகத்தின் அதிர்ச்சியில் உறைந்தார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பந்து மெதுவாக வந்ததும் ஹெல்மெட் கிரில் கண்ணை பாதுகாத்து அபாயத்தை தவிர்த்து உள்ளது. இதனை பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி தேவிஷா மிகவும் பதற்றம் அடைந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) March 29, 2025