கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி முனிரத்னம் (32). இவர் தனது இரு மகன்களான சந்தோஷ்குமார் (11) மற்றும் கலைச்செல்வனை நீச்சல் கற்றுக்கொடுக்க தொட்டூர் கிராமத்தில் உள்ள விவசாய நீர் சேமிப்பு குட்டைக்கு அழைத்துச் சென்றார்.

இதனையடுத்து முனிரத்னம் மற்றும் அவரது மூத்த மகன் சந்தோஷ் குமார் ஆகியோர் திடீரென நீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்  இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முனிரத்னம் சம்பவம் நேரத்துக்கு முன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வழக்குபதிவு செய்த சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.