
தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் விக்னேஷ்(28). இவர் நேற்று முன்தினம் போடியில் இருந்து கோடங்கிபட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது போடி சாலையில் உள்ள முருகன் கோயில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.
அதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விக்னேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் விக்னேஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.