கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அருகே தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் வேலை முடிந்து பெண் ஊழியர்கள் தேன்கனிக்கோட்டை-ஓசூர் சாலையில் நடந்த சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் பணியாளர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜெயஶ்ரீ, சாந்தா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மூன்று பேர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் உயிரிழந்த இளம்பெண்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பெண் ஊழியர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற சிகப்பு நிற கார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.