
சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் விரைவு சாலையில் விஷ்ணு (18), நிஜாம் (18) ஆகிய வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த நிஜாமை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கொண்டாட்டத்திற்காக சென்ற வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.