
வேலூர் மாவட்டத்தில் உள்ள கணியம்பாடி அடுத்த மேல்வள்ளம் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டப்படுகிறது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் முன் பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி ஈடுபட்டது. அந்த பணியில் முகேஷ்(24), சதீஷ்(24) என்ற ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதே இரும்பு தடுப்பு மேலே சென்ற மின்சார கம்பியில் உரசியது. இதனால் முகேஷும், சதீஷும் மின்சாரம் பயந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.