கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடன் தொந்தரவால் ஒரு தம்பதியினர் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உப்புத்தரை பகுதியைச் சேர்ந்தவர் சஜ்ஜித் மோகணன். இவரது மனைவி ரேஷ்மா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான மோகனன் கடன் தொந்தரவால் மன உளைச்சலில் இருந்தார்.

இதனால் கணவன் மனைவி இருவரும் இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதம பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.