
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேப்பங்காடு பகுதியில் ரபிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ப்ரீத்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் தவறான சிகிச்சை அளித்ததால் குழந்தை திடீரென உயிரிழந்ததாக தெரிகிறது.
குழந்தைக்கு ஊசி போட்ட பிறகு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.