
கன்னியாகுமரி மாவட்டம் செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அனில். இவரது மனைவி அருணா. இந்த தம்பதியினருக்கு அனிருத்(4), ஆரோன்(2) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். மாங்காய் பறிக்கும் தொழிலாளியான அனில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரத்திலிருந்து தவறி விழுந்ததால் படுகாயமடைந்து தற்போது படுத்த படுக்கையாக உள்ளார். நேற்று முன்தினம் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த ஆரோன் சமையலறையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து ஜூஸ் என நினைத்து குடித்ததாக தெரிகிறது.
சிறிது நேரத்தில் அருண் வயிற்று வலியால் கதறி துடித்தான். மகன் உடல் மீது மண்ணெண்ணெய் வாசனை வந்ததால் அதிர்ச்சியடைந்த தாய் உடனே தனது மகனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆரோன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.