அமெரிக்காவில் நிறுவப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் முதலிடம் பிடித்துள்ளவர். அவர் எக்ஸ் தளத்தைப் பெற்ற பின், உலகமெங்கும் பலரும் அந்த தளத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆனால், பிரேசில் உச்சநீதிமன்றம், அந்த நாட்டில் எக்ஸ் தளம் செயல்பட கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என அறிவித்தது.

பிரேசில் தேர்தலின்போது, மூடப்பட்டிருந்த கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததால், பிரேசில் உச்சநீதிமன்றம், எக்ஸ் தளத்துக்கு அபராதமாக 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்த உத்தரவிட்டது. இந்த பணத்தை, நீதிமன்றம் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு செலுத்த வேண்டும் எனவும் மஸ்க் மீது தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், மஸ்க் அந்த தொகையை வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக அனுப்பிவிட்டார். இதனால், பிரேசிலில் எக்ஸ் தளத்தின் மீதான தடையை நீக்குவது மேலும் சிக்கலாகியது.

பிரேசிலின் உச்ச நீதிமன்ற நீதிபதி, மஸ்க் மீண்டும் சரியான வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த உத்தரவிட்டார். இதனால் நெட்டிசன்கள், “சர்வசாதாரணமாக பல பிரச்னைகளை கையாளும் மஸ்க், இந்த விஷயத்தில் தவறு செய்துவிட்டார்” என விமர்சிக்கின்றனர்.