
கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பஸ், வேன் மற்றும் கார்களில் வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டு தேதி அன்று மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட காரில் வந்த பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கொல்லம் அருகே கார் வந்த போது, எதிரே வந்த சுற்றுலா பஸ்ஸும், காரும் நேருக்கு நேர் மோதியது.
இதில் கார் நொறுங்கியது. இதில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பலியான 2 பேரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணன் மற்றும் சண்முகராஜா என்பது தெரிய வந்தது. கார் தவறான திசையில் சென்றது தான் இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.