
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சின்ன பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு விடுதியில் நண்பர்கள் சிலர் அறை எடுத்து தங்கி இருந்தனர். அதாவது திருச்சி மற்றும் சென்னையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் அங்கு தங்கியிருந்தனர். இவர்களில் ஜெயகண்ணன் மற்றும் ஆனந்த்பாபு இருவரும் நேற்று முன்தினம் இரவும் மது அருந்தினர். அதன் பிறகு பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்டனர். அதன்பின் இருவரும் தூங்க சென்ற நிலையில் நேற்று காலை வீட்டில் சடலமாக கிடந்தனர்.
இதனை மற்ற இரு நண்பர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சிக்கன் சமைத்துவிட்டு அவர்கள் அடுப்பை அணைக்காமல் சென்றுள்ளனர். இதனால் வெளியேறிய புகை காரணமாக இருவரும் மூச்சு திணறல் ஏற்பட்டும் உயிரிழந்தனர் என்பது தெரியவந்துள்ளது.