கன்னியாகுமரி மாவட்டம் கல்லங்குழி என்னும் பகுதியில் லியோ பிரவீன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி நிம்மி ஜோஷி. இவர் தனியார்  கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. அதன்பிறகு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதனால் நிம்மி ஜோஷி அவரது கணவரை பிரிந்து தாயார் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று நிம்மி ஜோஷி வழக்கம்போல் தனது மகனை தாயாரிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து குழந்தை வீட்டிற்கு பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தது. அதன்பின் குழந்தையின் சத்தம் கேட்காததால் நிம்மியின் தாயார் பின்புறம் சென்று பார்த்தபோது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ளவர்களின் உதவியோடு குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.