ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் சிராப்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு உதய் நாராயணன் பள்ளி அமைந்துள்ளது. இங்கு நேற்று மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட போது ஒரு மாணவனின் உணவில் பல்லி இறந்து கிடந்துள்ளது. இதனால் மற்ற மாணவர்கள் அதனை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும் அந்த உணவை சாப்பிட்ட 100 மாணவர்கள் தற்போது உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..