விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் எக்ஸ்-ரே எடுக்கும் அறையை சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளரான உமா மகேஸ்வரிக்கும் டெக்னீசியனான ராஜு என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறியது. அப்போது உமா மகேஸ்வரி ராஜு காலணியால் தாக்கியதாக தெரிகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் உமா மகேஸ்வரி அழுதுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் ராஜுவை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவ அலுவலர்கள் அவர்களிடமிருந்து ராஜுவை மீட்டு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.