ஈரோடு மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சரவணன்-மஞ்சுளா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மூத்த மகள் தாத்தா பாட்டி வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடைய இளைய மகள் அக்ஷயா. இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சுளா தன் மகளிடம் வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளை செய்யுமாறு கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர் அவர் மாலை நேரத்தில் வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் சமையலறையில் அக்ஷயா துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது தாய்  உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியோடு தன் மகளை மீட்டு மருத்துவமனைக்கு  கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோபி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.