
நடிகை தமன்னா விஜய் வர்மாவை காதலிப்பதாக சில வருடங்களுக்கு முன்பாக கிசுகிசுக்கப்பட்டது. அவர்கள் பார்ட்டியில் முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் போட்டோவும் இணையத்தில் வைரலானது. அதன் பிறகு தான் அவர்கள் தங்களுடைய காதலை வெளிப்படையாக பொதுவெளியில் அறிவித்தார்கள். பின்பு ஜோடியாக வெளியே சுற்ற ஆரம்பித்தார்கள். ஆனால் தற்போது தமன்னாவும், விஜய் வர்மாவும் பிரேக்கப் செய்து கொண்ட தாக பாலிவுட் மீடியாக்களில் தொடர்ந்து செய்தி வெளிய வந்து கொண்டிருக்கிறது.
இருவரும் காதல் தோல்விக்காக தங்களுடைய நண்பர்களுக்கு தனித்தனியாக இருவரும் விருந்து வைத்தார்கள் என்றும் கூறினார்கள். ஆனால் சமீபத்தில் இருவரும் ஒரே அபார்ட்மெண்டில் ஹோலி பண்டிகை கொண்டாடினார்கள் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் இதுவரை இருவரும் இதுகுறித்து எதுவுமே பேசவில்லை. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ரிலேஷன்ஷிப் குறித்து பேசிய விஜய் வர்மா, “ஐஸ்கிரீமை சுவைப்பது போல ரிலேஷன்ஷிப்பை எடுத்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் இனிக்கும், சில நேரங்களில் உப்பாக இருக்கும். அதை அனுபவித்து செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.