
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்தவர் சுசித்ரா. இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது ஆர்.ஜேவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுசித்ரா ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரிடம் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே அவர்களுடைய திருமண உறவில் உண்மையாக இல்லை என்றார்.
அதன் பிறகு அவர்கள் இருவரும் திருமண உறவில் இருக்கும்போதே தங்களுக்கு பிடித்த நபர்களுடன் டேட்டிங் செல்வார்கள். ஐஸ்வர்யா ஒரு நல்ல தாய் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் தனுஷ் தந்தையாக தன்னுடைய கடமையை சரியாக செய்கிறார். திருமண உறவில் தனுஷ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஐஸ்வர்யா கூறுகிறார். ஆனால் அதைத்தான் அவர் தனுசுக்கு செய்துள்ளார். தனுஷ் ஐஸ்வர்யாவும் ஒருவருக்கொருவர் ஏமாற்றியுள்ளனர். என்னைப் பொறுத்தவரை இவர்களின் இரு மகன்களும் தாத்தாவிடம் வளர்வது தான் சிறந்தது என்று நடிகர் ரஜினியை மறைமுகமாக குறிப்பிட்டு கூறினார். மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.