ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 21 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. இரவு பகலாக நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளை துரித கதியில் நடத்த ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி இன்னும் சரக்கு ரயிலில் 2 பெட்டிகளும், என்ஜினும் மட்டுமே அகற்றப்பட இருக்கிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறார்கள். பலர் வீடு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில், இந்த ரயில் விபத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் இதயம் நொறுங்கியது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். அமெரிக்க மக்கள் அனைவரும் எங்களின் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.