
டெல்லியை சேர்ந்த தம்பதி அங்கூர் குப்தா – தீபிகா. இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் இரண்டு குழந்தைகளின் உடலின் மேல் பகுதியும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 8 அதாவது குழந்தைகள் பிறந்து 11 மாதத்தில் இருவரையும் பிரிக்கும் அறுவை சிகிச்சை எய்ம்ஸ் மருத்துவமனையால் மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 9 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தைகள் இருவரும் தனியாக பிரிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர். மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் தங்களது ஒரு வயது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.