துருக்கியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் எதிர்க்கட்சி  தலைவரான கேன் அட்டாலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி அஹ்மத் சிக் பேசினார். அதில் அவர் கூறியதாவது, ஆளும் கட்சியை  பயங்கரவாத அமைப்பு என்று கூறினார். உங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதால் நீங்கள் கேன் அட்டாலை பயங்கரவாதி என்று கூறுகிறீர்கள். ஆனால் இங்கு இருப்பவர்கள் தான் மிகப்பெரிய பயங்கரவாதி என்று அவர் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆளும் கட்சி எம்.பி ஒருவர் திடீரென ஓடி சென்று பேசிக் கொண்டிருந்த அஹ்மத் சிக் முகத்தில் தாக்கினார். இதனால் இரு கட்சினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.  சபாநாயகர் சொல்லச் சொல்ல கேட்காமல் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அவர்களை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விலக்கி விட்டனர். இந்த கலவரத்தில் பெண் எம்.பி உட்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. அதோடு பலரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பாராளுமன்றம் கலவரமாக காணப்பட்டது.