விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான விவாதம் நடைபெறுகிறது. அதனைப் போலவே ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதிக்கப்படுகிறது.

இந்த வாரம் வித விதமான பொருட்களை வாங்கி குவிப்பவர்கள் மற்றும் அதனை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்துள்ளது. அதில் மனைவிமார்கள் கூறிய ஒவ்வொரு விஷயமும் தொகுப்பாளரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெண் ஒருவர் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து ஹேண்ட் பேக் வாங்கியுள்ளார். மற்றொருவர் தன்னுடைய கணவர் வருமானம் 20 ஆயிரம் ரூபாய் ஆனால் அவர்களின் செலவு 26 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளது. இதனைக் கூறிய கணவரிடம் தொகுப்பாளர் கேள்வி கேட்டபோது தனது குழந்தை மற்றும் மனைவி எந்த ஒரு கஷ்டமும் படக்கூடாது என்று கூறி அரங்கத்தையே நிசப்தத்தில் ஆழ்த்தினார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.