
சசிகலாவும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வமும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்த நிலையில் சிவகங்கை சேர்ந்த அதிமுக தொண்டர்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளது அக்கட்சியில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் தொண்டர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது என்பதை எண்ணி கழகத்தின் உண்மை தொண்டர்கள் கண்ணீர் வடித்து கதறி அழுகின்றோம்.
சிதறி கிடக்கும் கழகத் தொண்டர்களை ஒன்றுப்படுத்துவோம். அதிமுகவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல உறுதி ஏற்போம் என்று போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.