
தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் இன்று பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதில் தமிழக முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி, காஞ்சிபுரம், சேலம், மயிலாடுதுறை, ஈரோடு, உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்த நிலையில் பனையூர் அலுவலகத்திற்கு விஜய் சற்று முன் வந்தடைந்தார். அவர் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியாக தனித்தனியாக சந்தித்து நியமன ஆணைகளையும் வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது